சரிவுடன் பங்குச்சந்தை துவக்கம்; ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

 

சரிவுடன் பங்குச்சந்தை துவக்கம்; ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் கடும் சரிவுடன் துவங்கியது. ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிந்தது

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் கடும் சரிவுடன் துவங்கியது. ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிந்தது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து  வந்தது. இதனிடையே, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனாலும் அதன் பின்னர், ரூபாயின் மதிப்பு சரிவு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இப்போது வரையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு இன்றும் மீண்டும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.74.47 காசுகளாக சரிந்துள்ளது.

அதேபோல், இந்திய பங்குச்சந்தைகளிலும் இன்றைய காலை வர்த்தகம் சரிவுட்டனே தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை 1,037 புள்ளிகள் சரிவடைந்து 33,723 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 321 புள்ளிகள் குறைந்து 10,138 புள்ளிகளிலும் வர்தகமாகிறது.