சரிவுடன் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது..

 

சரிவுடன் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது..

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. இருப்பினும் சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த வாரம் தினம்தினம் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள் இன்று கடும் ஏற்ற இறக்கத்தை சந்தித்தன. நிறுவனங்களின் வருவாய் கடந்த 8 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. கடந்த செப்டம்பர் மாத தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரம் இன்று வெளியாகிறது இது குறித்த எதிர்பார்ப்புகளும் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

யெஸ் பேங்க்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், யெஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக்மகிந்திரா வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஹீரோமோட்டோ கார்ப், வேதாந்தா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் இன்போசிஸ் உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஹீரோமோட்டோகார்ப்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,244 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,293 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. இன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.87 லட்சம் கோடியாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.41 புள்ளிகள் உயர்ந்து 40,345.08 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 5.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,913.45 புள்ளிகளில் முடிவுற்றது.