சரிவிலிருந்து மீட்ட எல்கர், டி காக்.. இந்தியாவிற்கு ஈடுகொடுத்த தென்னாபிரிக்கா!!

சரிவிலிருந்து மீட்ட எல்கர், டி காக்.. இந்தியாவிற்கு ஈடுகொடுத்த தென்னாபிரிக்கா!!

சரிவில் இருந்த தென்னாப்பிரிக்க அணியை எல்கர் மற்றும் டி காக் இருவரும் சதமடித்து நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி.

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர் ரோகித் சர்மா 176 ரன்களும் மயங்க் அகர்வால் 215 ரன்களும் அடித்து இந்தியாவிற்கு ரன் சேர்த்தனர். 

ind vs sa

முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.  இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. இரண்டாம் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 39 க்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. 

மூன்றாம் நாளில் மதிய உணவு இடைவேளைகுள்ளேயே தென்ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துவக்க வீரர் எல்கர் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். இவருடன் கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் டி காக் ஜோடி செய்து அணிக்கு ரன் குவிக்க உதவினர். 

துவக்க வீரர் எல்கர் இந்திய பந்துவீச்சாளர்களை நிதானமாக கையாண்டு சதம் அடித்தார். மறுமுனையில் ஆடிய டு பிளஸிஸ் அரைசதம் அடித்த பிறகு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி காக் எல்கருடன் ஜோடி சேர, இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறினர். 6வது விக்கெட்டுக்கு இடஙக ஜோடி 168 ரன்கள் சேர்த்தது. 150 ரன்களை கடந்த எல்கர் 160 ரன்கள் இருக்கையில், ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

de cock

நிலைத்து ஆடிய டி காக் சதமடித்தார். இவர் 111 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாபிரிக்காவின் விக்கெட் சரிய துவங்கியது. மூன்றாம் நாள் முடிவிற்குள் தென் ஆப்பிரிக்காவின் அனைத்து விகெட்டுகளும்  வீழ்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 385/8 என்ற நிலையில் தென்னாபிரிக்கா உள்ளது. 

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

-vicky