சரியாக வாடகை பாக்கி தராத கே.ஜி.எஃப் பட ஹீரோ: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

 

சரியாக வாடகை பாக்கி தராத கே.ஜி.எஃப் பட ஹீரோ: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

நடிகர் யாஷ் வசிக்கும் வாடகை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நடிகர் யாஷ் வசிக்கும் வாடகை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னடம், தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் யாஷ். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் வாடகை வீட்டில் அம்மா புஷ்பாவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மாத  வாடகை மட்டுமே ரூ.40 ஆயிரம். 

yash

இந்நிலையில் வாடகை சரியாக செலுத்தவில்லை என்று கூறி வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் கூறினார். இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் வீட்டின் உரிமையாளர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மார்ச் 31ம் தேதிக்குள் (இன்று) வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 

yash

இதுகுறித்து யஷ்சின் தாயார் புஷ்பா, உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ‘ஹாசனில் சொந்தமாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த கட்டுமான பணிகள் முடிவடையும் வரை இந்த வாடகை வீட்டை காலி செய்ய 6 மாதங்கள் கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

yash

இதற்கு வீட்டு உரிமையாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மாத கால அவகாசம் வழங்கி, மே 31 ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.