சராசரியைவிட இதுவரை 25% கூடுதல் மழை சென்னைக்கு!

 

சராசரியைவிட இதுவரை 25% கூடுதல் மழை சென்னைக்கு!

மற்ற இடங்களைவிட நீலகிரியில் மிகக் கனமழையை எதிர்பார்க்கலாமாம். எனவே, பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து விரைவில் வேகமாக அதிகரிக்கும். கர்நாடகவின் கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, மற்றும் கபினி அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.

ஆகஸ்ட் முதல் ஆறு தேதிகள்வரை மட்டுமே, சென்னையில் வழக்கமாக பொழியும் அளவைவிட 25% கூடுதலாக, அதாவது 251 மி.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது. கர்நாடகாவில் ஒரு ரவுண்டு வரும் தென்மேற்கு பருவம் காரணமாக ஆகஸ்ட் பத்தாம் தேதிவரை காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உண்டாம்.
 

Heavy rains expected for Nilgiris

நீலகிரியின் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 180 செ.மீ. வரை மழை கிடைத்துள்ளது. நீலகிரி, வால்பாறை, குடகு, வயநாடு, மூணாறு உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு செல்லவேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மற்ற இடங்களைவிட நீலகிரியில் மிகக் கனமழையை எதிர்பார்க்கலாமாம். எனவே, பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து விரைவில் வேகமாக அதிகரிக்கும். கர்நாடகவின் கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, மற்றும் கபினி அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.