சரவண பவன் ராஜகோபால் கடைசி ஆசை! சாகும்போதும் அண்ணாச்சியாகவே இறந்திருக்கிறார்!

 

சரவண பவன் ராஜகோபால் கடைசி ஆசை! சாகும்போதும் அண்ணாச்சியாகவே இறந்திருக்கிறார்!

இறப்பதற்கு முன், த‌ன்னுடைய கடைசி ஆசையாக குடும்பத்தினரிடம் அவர் கேட்டுக்கொண்டது என்ன தெரியுமா? “தான் இறக்கும் தினத்தன்றுகூட வாடிக்கையாளர்களுக்காக சரவண பவன் ஓட்டல்களை திறந்தே வைத்திருக்க வேண்டும்” என்பதுதான். அதன்படியே சரவண பவனின் அனைத்து கிளைகளும் நேற்று திறந்தே இருந்துள்ளது.

ராஜகோபாலின் கசப்புப் பக்கங்களை போதும் போதும்கிற அளவுக்கு எல்லாரும் அலசியிருக்கிறார்கள். எல்லா மனிதனுக்கும் அசிங்கமான ஒரு பக்கம் உண்டு. வெளியில் தெரியாதவரைக்கும் பெரிய ஆளு, தெரியவந்தால், ஆயுள் முழுக்க ஜெயிலு அவ்வளவுதான். ராஜகோபாலின் விபரீத ஆசை, அத்தனை வருடங்கள் சம்பாதித்து வைத்த பெயரையும் சடக்கென அழித்துவிட்டது.  தன் வீட்டு மாடியில் சிறிய அளவில் ‘சரவண பவன்’ என ஹோட்டலைத் துவங்கிய ராஜகோபாலின் பாசிட்டிவ் பக்கங்களையும் பார்ப்போமே!

Saravana Bhavan remains open

சுத்தம். நாற்பதை தாண்டியவர்களுக்கு சரவண பவன் என்றதும் உடனே நினைவுக்கு வருவது சுத்தம்தான். பரிமாறுபவர் முதல், சூப்பர்வைசர்வரை யூனிஃபார்ம் சுத்தம் முதல், பாத்திரங்கள், மற்றும் கட்டிடத்தின் சுத்தத்திற்கு நிறைய அக்கறை எடுத்துக்கொண்டார். வாடிக்கையாளர்கள் குறை என ஒன்று சொன்னால், மறுபேச்சின்று உடனே வேறு உணவு வழங்க எடுத்துக்கொண்ட சிரத்தையும், வாடிக்கையாளர்களுக்கு ‘எலைட் ஃபீலிங்’ தரும் மரியாதையும் சரவண பவன் காலத்து ஹோட்டல்கள் நினைத்தேப் பார்க்கமுடியாதவை. இறப்பதற்கு முன், த‌ன்னுடைய கடைசி ஆசையாக குடும்பத்தினரிடம் அவர் கேட்டுக்கொண்டது என்ன தெரியுமா? “தான் இறக்கும் தினத்தன்றுகூட வாடிக்கையாளர்களுக்காக சரவண பவன் ஓட்டல்களை திறந்தே வைத்திருக்க வேண்டும்” என்பதுதான். அதன்படியே சரவண பவனின் அனைத்து கிளைகளும் நேற்று திறந்தே இருந்துள்ளது.