சரவணா ஸ்டோர்ஸ் ஓனருக்கு ஜோடி நானா? அலறும் ஹன்சிகா

 

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.  தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் வெள்ளித் திரையில் தோன்றவுள்ளார்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கவிருக்கும் படத்தில்  ஹன்சிகா நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

arul

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.  தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் வெள்ளித் திரையில் தோன்றவுள்ளார். தற்போது  தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்  விளம்பரப் படங்கள் எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே இந்த படத்தை இயக்கவுள்ளனர். இவர்கள் ஏற்கனவே அஜித்தின் உல்லாசம், ஷெரின் நடிப்பில் வெளியான விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர்.

hansika

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இதன் பட்ஜெட் 30 கோடி என்றும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஸ்  ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.  

இந்நிலையில் சரவணா  ஸ்டோர்ஸ் விளம்பரப்படத்தில் அருளுடன் நடித்த ஹன்சிகாவே இந்த படத்தில் அவருக்கு ஜோடி என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹன்சிகா, இது தவறான தகவல் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.