சரவணா ஸ்டோருக்கு சீல் வைத்த தமிழக அரசு! 

 

சரவணா ஸ்டோருக்கு சீல் வைத்த தமிழக அரசு! 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள், நீச்சல் குழந்தைகள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. உத்தரவை மீறி திறந்தால் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

Statement

இந்நிலையில் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் வணிக வளாகம் இன்று தடையை மீறி திறக்கப்பட்டது. அதன்பின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையால் பிற்பகல் 2 மணியளவில் மூடப்பட்டது. இதனையடுத்து மலை 4 மணியளவில் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தினரால் மீண்டும் வணிக வளாகம் திறக்கப்பட்டதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர்.