‘சரத்குமாரை அப்பான்னு சொல்ல உனக்கு வெக்கமா இல்ல’ : நெட்டிசன் கேள்விக்கு நடிகை ராதிகா மகள் கொடுத்த பதிலடி!

 

‘சரத்குமாரை அப்பான்னு  சொல்ல உனக்கு வெக்கமா இல்ல’ : நெட்டிசன் கேள்விக்கு நடிகை ராதிகா மகள் கொடுத்த பதிலடி!

சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள  திரைப்படம் வானம் கொட்டட்டும். புதுமுக இயக்குநர் தனா  இயக்கத்தில் உருவான  இந்த படத்தில்  விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

 

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து ராதிகாவின் மகள் ரேயான் தனது டிவிட்டர் பக்கத்தில், அப்பா மற்றும் அம்மா என்று குறிப்பிட்டு #VaanamKottatum என்ற ஹேஷ்டாக்கை  பதிவிட்டதோடு உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அப்பா என்று கூறியுள்ளார்.

இதை கண்ட நெட்டிசன் ஒருவர், ‘அம்மா ok அப்பா சொல்ல உனக்கு வெக்கம் இல்ல.. இவர் உன் அப்பாவா…..’ என்று கேட்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான ரேயான், ஆமா என் அப்பா தான். என்ன பண்ண போற? என்று கேட்டுள்ளார்.

துணிச்சலாக பதிலளித்துள்ள ரேயானுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ரேயான் ராதிகாவுக்கும் ரிச்சர்ட் ஹார்டி என்பவருக்கும் 1992 ஆம் ஆண்டு பிறந்தவர்.  

ttn

ரிச்சர்ட் ஹார்டியை கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்த ராதிகா 1992 இல் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.