சரண்டர் ஆகுற நாள் தெரிஞ்சிட்டா, ஜாமீன்ல இருக்குற நாள் நரகம்!

 

சரண்டர் ஆகுற நாள் தெரிஞ்சிட்டா, ஜாமீன்ல இருக்குற நாள் நரகம்!

ஜாமீன்லயே காலத்தை ஓட்டிவிடலாம் என நினைத்திருந்த ராஜகோபாலுக்கு, ஜூன் 7ஆம் தேதி விரைவிலேயே வந்துவிட்டது கலக்கத்தை ஏற்படுத்தவே, ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிக்கொண்டு, அயம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் யுவரானர் என்று கண்ணை கசக்க, அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், உடனடியாக சரணடைய சொல்லி உத்தரவிட்டது.

ஏற்கெனவே மனைவி ஒன்று துணைவி ஒன்று என இரண்டுபேர் இருக்க, ‘மூன்றாவதாக ஜீவஜோதியை இணைவியாக சேர்த்துக்கொண்டால் நீங்க இருக்குற இடமே வேற’ என்ற ஆஸ்தான ஜோசியரின் பேச்சைக் கேட்டதால் வந்த வினை ராஜகோபாலுக்கு. தவறான பாதை காட்டிய ஜோசியர் அவருடைய பில்லுக்கு லம்ப்பாக வாங்கிக்கொண்டு செட்டிலாகிவிட்டார். பாவம், அண்ணாச்சிதான் சிக்கிக்கொண்டார். ஜீவஜோதியின் கணவரைக் கொன்ற குற்றத்திற்காக முதலில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படவில்லை. பில்லோடு சேர்த்து டிப்ஸ் கூடுதலாக வைத்தால் நீதியை வளைக்கலாம் என்ற எண்ணத்தில் கீழமை கோர்ட்டு வழங்கிய தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றார் அண்ணாச்சி. உயர்நீதிமன்றம்தான் அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

RajaGopal

உச்சநீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்து, ஜூன் 7ஆம் தேதி புழல் சிறையில் சரணடைய சொல்லி ஜாமீன் அளித்திருந்தது. ஜாமீன்லயே காலத்தை ஓட்டிவிடலாம் என நினைத்திருந்த ராஜகோபாலுக்கு, ஜூன் 7ஆம் தேதி விரைவிலேயே வந்துவிட்டது கலக்கத்தை ஏற்படுத்தவே, ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிக்கொண்டு, அயம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் யுவரானர் என்று கண்ணை கசக்க, அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், உடனடியாக சரணடைய சொல்லி உத்தரவிட்டது. ஆக்சிஜன் மாஸ்க்கோடு ஆம்புலன்ஸில் வந்திறங்கிய ராஜகோபாலுக்கு நல்ல வெளுப்பான வெள்ளை ஆடை வழங்கப்பட்டுவிட்டது. சிறையில் ராஜகோபாலுக்கு என்ன வேலை தருவார்கள்? ஒருவேளை தோசை மாஸ்டர் வேலையாக இருக்கலாம்!