சரக்கு விமானத்தில் செல்லவில்லை என பிரஷாந்த் கிஷோர் விளக்கம்! அலசும் மத்திய அரசு… சிக்கலில் மம்தா!

 

சரக்கு விமானத்தில் செல்லவில்லை என பிரஷாந்த் கிஷோர் விளக்கம்! அலசும் மத்திய அரசு… சிக்கலில் மம்தா!

மம்தா பானர்ஜிக்கு உதவி செய்வதற்காக சரக்கு விமானத்தில் ரகசியமாக பிரஷாந்த் கிஷோர் கொல்கத்தா சென்றதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 

மம்தா பானர்ஜிக்கு உதவி செய்வதற்காக சரக்கு விமானத்தில் ரகசியமாக பிரஷாந்த் கிஷோர் கொல்கத்தா சென்றதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடன் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஒப்பந்தம் செய்துள்ளன. அடுத்த ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், மம்தா பானர்ஜியும் பிரஷாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்று பா.ஜ.க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதனால் ஆளுநர் மூலமாக மம்தா பானர்ஜி அரசுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை பா.ஜ.க ஏற்படுத்தி வருகிறது.

mamta-banerjee-783

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில் அரசால் எதையும் செய்ய முடியாத அளவுக்கு முட்டுக்கட்டைகள் வருவதாக கூறப்படுகிறது. இதனால், மாநிலத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிரான எதிர்ப்பலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அவசர நிலையை கையாள பிரஷாந்த் கிஷோரின் உதவியை மம்தா பானர்ஜி நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகின. மம்தாவுக்கு உதவுவதற்காக சரக்கு விமானம் ஒன்றில் பயணம் செய்து பிரஷாந்த் கிஷோர் கொல்கத்தா சென்றதாக கூறப்படுகிறது.

prashanth-kishor-45

ஊரடங்கு உத்தரவை மீறி பிரஷாந்த் கிஷோர் எப்படி கொல்கத்தா வரலாம் அதுவும் அரசு விதிகளை மீறி சரக்கு விமானத்தில் எப்படி அவர் பயணம் மேற்கொள்ளலாம் என்று மம்தாவுக்கு எதிராக பா.ஜ.க அரசு சாட்டையைச் சுழற்றி வருகிறது. இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சிசிடிவி கேமரா காட்சி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
சரக்கு விமானத்தில் பயணம் செய்து கொல்கத்தா சென்றதாக வெளியான செய்தி தவறானது என்று பிரஷாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆதாரமற்ற குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்படுகிறது. நான் கொல்கத்தாவுக்கு செல்லவில்லை, ஊரடங்கு தடை விதிகளை மீறவும் இல்லை. நான் கொல்கத்தா சென்றதாக வெளியான தகவல் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.