சரக்கு விநியோகம் இல்லை… மளிகைக் கடைகளை மூட வியாபாரிகள் முடிவு? – பொது மக்கள் அதிர்ச்சி

 

சரக்கு விநியோகம் இல்லை… மளிகைக் கடைகளை மூட வியாபாரிகள் முடிவு? – பொது மக்கள் அதிர்ச்சி

போதுமான சரக்குகள் விநியோகம் இல்லாத நிலையில் மளிகைக் கடைகளை மூடும் நிலை உருவாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போதுமான சரக்குகள் விநியோகம் இல்லாத நிலையில் மளிகைக் கடைகளை மூடும் நிலை உருவாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. ஆனால், அந்த கடைகளுக்கு தேவையான சரக்குகள் வந்து சேர்வதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யவில்லை. காய்கறிகள் மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், சோப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் விநியோகத்துக்கு சரியான திட்டமிடல் இல்லை. இதனால், மளிகைக் கடைகளில் இருக்கும் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுத் தீர்ந்துவிட்டன. இப்போது கேட்டாளே, மிளகு, சீரகம், முந்திரி, திராட்சை, துவரம் பருப்பு என பல பொருட்கள் இல்லை என்று கூறும் நிலை வந்துவிட்டது. நான்கு கடை ஏறி இறங்கினால் ஒரு பொருள் ஒரு கடையில் கிடைக்கிறது. 

grocery-shop-89

ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிந்துவிடும், அதன் பிறகு பொருட்கள் வரத்து சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொருட்கள் உற்பத்தி, விநியோகத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர் 10 பொருள் கேட்டால் அதில் ஐந்து கிடைப்பதே அரிதாகிவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் பொருட்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும். அதன்பிறகு வெறும் கடையை திறந்து வைத்து என்ன செய்வது… மளிகைக் கடைகள் மூடும் நிலை உருவாகிவிடும் என்று மளிகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பொருட்களின் விலையும் 20 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கூறுகின்றனர்.

vegetable-selling.jpg

மூன்று மாத அளவுக்குத் தேவையான பொருட்கள் நாடு முழுவதும் உள்ள குடோன்களில் பாதுகாப்பாக உள்ளது. அவற்றை கடைகளுக்கு கொண்டு செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. மாநில அளவிலான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோதுமை, மைதா, ரவை, மசாலா பொருட்கள் தமிழகத்துக்கு வருவது குறைந்துள்ளது. 
அத்தியாவசிய பொருட்கள் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவதற்கும், அது மாநிலம் முழுவதும் சென்று சேர்வதற்கும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால் ஊரடங்கு அறிவிப்பால் பயன் இல்லாமல் போய்விடும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.