சம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா? அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க!?

 

சம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா? அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க!?

மண்டையை  பிளக்கும் கோடை வெயில் 

கோடை வெயில் ஆரம்பித்ததிலிருந்தே வெயில் மண்டையைப்  பிளக்க ஆரம்பித்து விட்டது. வெயிலினால் நாம் விரைவிலேயே சோர்ந்து விடுகிறோம். குறிப்பாக நம் முகம் வெயிலில் கருக்க ஆரம்பித்து விடும். பெரும்பாலும் இந்த கோடைக்காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை துணியால் மூடி கொண்டும்,  அல்லது சன் ஸ்கீம் போன்ற அழகுப்பொருட்களைப் பயன்படுத்தியும் வருவார்கள். ஆனால் சத்தான உணவுகளின் மூலம் கூட நாம் நம் முகத்தை பளபளக்கச் செய்யலாம். 

நெல்லிக்காய் ஃபேஸ் பேக்

amla

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பெரிய நெல்லிக்காய் ஒன்றே போதுமானது. நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் அது நம் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை கண்ணாடி போல பளபளக்க வைக்கும். நெல்லிக்காயை பயன்படுத்தி  நாம் ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.  இதில் வைட்டமின் சி உள்ளதால், சருமத்தின் சோர்வைப் போக்கி, வயதான தோற்றத்தை மறைக்கிறது. 

நெல்லிக்காய் சாறு

amla juice

அதே போல் தினமும் நெல்லிக்காய் சாறு குடித்து வரலாம்.  நெல்லிக்காயை கொட்டை நீக்கி அரைத்து அதில் தேன் சேர்த்து குடிக்கலாம்.  இதை தயாரிப்பது மிகவும் எளிமையாக இருப்பதால் இதை நீங்கள் தினமும் நடைமுறைப்படுத்தலாம். பொதுவாக தேனில் சரும பாதிப்புகளை நீக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதனால் முகம் மிளிருவதுடன், தேன்  கலந்து சாப்பிடுவதால் உங்கள் எடையும் குறைய வாய்ப்புள்ளது. 

நெல்லிக்காய்  ஜூஸ் செய்வது எப்படி?

amla

  • 5 முதல் 7 நெல்லிக்காயை நன்கு சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். 
  • பின்பு நறுக்கிய நெல்லிக்காயை மிக்சியில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். 
  • பின்பு கலவையை வடிகட்டி, பின் அதில் தேன்  கலந்து தினமும் குடித்து வர வேண்டும். இப்படி தினமும் குடித்து வர உங்கள் முகம் மிளிரும். என்ன நெல்லிக்காய் ஜூஸ் போட கிளம்பியாச்சா? 

இதையும் வாசிக்க: அழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா…இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க!