சம்பளத்துடன் ஆசை ஆசையாக தாயை பார்க்கச் சென்ற ஆண் செவிலியர்.. லாரி மோதி உயிரிழந்த சோகம்!

 

சம்பளத்துடன் ஆசை ஆசையாக தாயை பார்க்கச் சென்ற ஆண் செவிலியர்.. லாரி மோதி உயிரிழந்த சோகம்!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு பரவி, பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளா தான்.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு பரவி, பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளா தான். அங்கு தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அங்கு கொரோனா கட்டுக்குள் வந்து விட்டது. தற்போது வரை அங்கு 357 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த ஆண் செவிலியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் குன்னம்குளம் என்னும் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் பயிற்சி செவிலியராக ஆசிஃப் சேர்ந்துள்ளார். இவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்களை கவனித்து வந்துள்ளார். கடந்த மார்ச் அவர் பார்த்த வேலைக்கான சம்பளம் கிடைத்துள்ளது. அதனை எடுத்துக் கொண்டு ஆசையாக தனது தாயை பார்க்க ஆசிஃப் பைக்கில் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியில் அரிசி மூட்டைகளை ஏற்றுக் கொண்டு வந்த லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆசிஃப்பின் மரணம் மருத்துவக் குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.