சமையலில் வெங்காயம் பயன்படுத்துறதுல இத்தனை ஆபத்தா? | இப்படியெல்லாம் உபயோகிக்காதீங்க ப்ளீஸ்!

 

சமையலில் வெங்காயம் பயன்படுத்துறதுல இத்தனை ஆபத்தா? | இப்படியெல்லாம் உபயோகிக்காதீங்க ப்ளீஸ்!

விஷக்காய்ச்சலைத் தடுப்பதற்கான பலதரப்பட்ட ஆய்வில், எந்த வித உடல் நலக்குறைபாடும் இன்றி ஓர் விவசாய குடும்பம் வாழ்ந்து வந்ததை கண்டறிந்தார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெங்காயத்தையே காரணமாகச் சொன்னார்கள். 

கோடை முடிந்து ஆரம்பித்த முதல் மழைக்கே சென்னையின் சாலைகளில் நீர் தேங்கி நிற்க ஆரம்பித்து விட்டது. மழைக்காலம் ஆரம்பித்தாலே நோய்களும் வரிசை கட்டி படையெடுக்க ஆரம்பித்துவிடுகின்றன. 
எளிய முறையில் வீட்டில் இருந்த படியே நம்மை நோய் தாக்குதலிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளைப் பார்ப்போம். நாம் தினந்தோறும் சமையலில் பயன்படுத்தி வரும் வெங்காயத்தில் இருக்கிறது நோய்களை எதிர்க்கும் அத்தனை ஆற்றல்களும்.

onion

வரலாற்றில் நடந்த உண்மை சம்பவத்தைச் சொல்கிறேன்… அது 1919ம் வருஷம். உலகம் முழுக்கவே ஒருவிதமான விஷக்காய்ச்சல் பரவி வந்தது. பெயர் தெரியாத விஷக்காய்ச்சலுக்கு ஏறக்குறைய 40 மில்லியன் பேர்கள்  உயிரிழந்தார்கள். விஷக்காய்ச்சலைத் தடுப்பதற்கான பலதரப்பட்ட ஆய்வில், எந்த வித உடல் நலக்குறைபாடும் இன்றி ஓர் விவசாய குடும்பம் வாழ்ந்து வந்ததை கண்டறிந்தார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெங்காயத்தையே காரணமாகச் சொன்னார்கள். 
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இரவு தூங்குவதற்கு முன் வெங்காயம் அரிந்து வைக்கப்படுவதும், மறுநாள் காலை கறுப்பாக மாறியவுடன் அதை வெளியே எறிந்து விடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. 
அந்த குறிப்பிட்ட வெங்காயத்தை பரிசோதனை செய்ததில், அந்த அறைக்குள் பரவியிருந்த அத்தனை வைரஸ் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் வெங்காயம் தன்னை நோக்கி ஈர்த்து கொண்டதை கண்டறிந்தனர்.

onion

அவசர அவசரமாக அலுவலகம் செல்பவர்கள் என்ன செய்கிறோம்?
முதல் நாள் ராத்திரியே வெங்காயத்தை உரித்து, நறுக்கி பாலிதீன் கவர்களில் போட்டு, ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்துக் கொள்கிறோம். நம்முடைய ஃப்ரிட்ஜில் இருக்கும் அத்தனை கிருமிகளையும் வெங்காயம் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும். அந்த வெங்காயத்தை அடுத்த நாள் சமையலில் பயன்படுத்துகிறோம். 
வெங்காயத்தை நறுக்கி, அரைமணி நேரத்திற்குள்ளாகவே அதைப் பயன்படுத்தி விட வேண்டும். இல்லையென்றால் பாக்டீரியாக்களையும் , வைரஸ்களையும் தன்னுள் வெங்காயம் ஈர்க்க ஆரம்பித்து விடும். அதனால் உடல் நலக் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

இந்த மழைக்காலத்தின் ஆரம்பத்தில் இருந்தே தினமும் ஒரு ஒரு பெரிய வெங்காயத்தை நான்காக நறுக்கி உங்கள் வீடுகளின் அறைகளில் சுவர் ஓரமாக வைத்து, அடுத்த நாள் தூக்கி தூர எறிந்து விடுங்கள். மருத்துவர்களுக்கு கொடுப்பதை விட,வெங்காயம் வாங்குவதற்கு செலவழிக்கலாம்.