சமைத்த உணவையே 3 நாட்களுக்கு மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிட்ட வடமாநில இளைஞர் உயிரிழப்பு!

 

சமைத்த உணவையே 3 நாட்களுக்கு மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிட்ட வடமாநில இளைஞர் உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டரம்பாக்கம் கிராமத்தில் உணவு விஷமாகி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மட்டும் உணவு விஷமாகி உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த அசாம் மாநில தொழிலாளர் அஜய் முரா(24) சமைத்த உணவையே மீண்டும் மீண்டும் சமைத்து சாப்பிட்ட காரணத்தினால் உணவு நஞ்சாகி மூச்சுத்திணறல் மற்றும் அதீத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

சமைத்த உணவையே 3 நாட்களுக்கு மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிட்ட வடமாநில இளைஞர் உயிரிழப்பு!

இதேபோல் மார்ச் 4 ஆம் தேதி செட்டிபேடு கிராமத்தில் மாஜ் சென்டரில் பணியாற்றிய வடமாநில இளம்பெண் சுங் சூய் மொய், சாப்பிட்டுவிட்டு இரவு துாங்கியவர் காலை இறந்துள்ளார். ஏப்ரல் 19 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிடியாக பணியாற்றிய அசாம் மாநிலத்தை சேர்ந்த கிபாரூல் ஸ்லாம் (21) என்ற இளைஞர் உயிரிழந்தார். ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரகடம் சிப்காட்டில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திலீப் சத்தார்(35) உயிரிழந்தார். ஏப்ரல் 26 ஆம் தேதி மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த குபின் சந்த் மண்டல்(39) இரவு முட்டை சாதம் சாப்பிட்டு காலையில் உயிரிழந்தார். கடந்த 1ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் வீணாமல்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் சுகாதாரமற்ற முறையில் கும்பலாக வசித்து வருவது இவ்வாறு உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக தற்போதைய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் வருமானம் இல்லாததால் வறுமை காரணமாக வட மாநில தொழிலாளர்கள் இறைச்சி கடைகளில் தரமற்ற இறைச்சி கழிவுகளை வாங்கி சுகாதாரமற்ற முறையில் சமைத்து மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை சமைத்த உணவையே மீண்டும் மீண்டும் சமைத்து சாப்பிடுவதால் அதீத வயிற்றுப் போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.