சமைத்து சாப்பிட வேண்டாம் ! முளைக்கட்டி சாப்பிடுங்கள் ! நோய்கள் அண்டாது !

சமைத்து சாப்பிட வேண்டாம் ! முளைக்கட்டி சாப்பிடுங்கள் ! நோய்கள் அண்டாது !

முளைகட்டி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான விட்டமின் சி உயிர்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். நாள்தோறும், காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளைகளில் ஏதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்கள், பயறுகள் சாப்பிடலாம். மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நல்லது. 

தானியங்களை சமைத்து சாப்பிடாமல் முளைக் கட்டி சாப்பிட்டால் இதய நோய்கள் நெருங்காது என இயற்கை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Sprouted Grains

முளைகட்டி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான விட்டமின் சி உயிர்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். நாள்தோறும், காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளைகளில் ஏதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்கள், பயறுகள் சாப்பிடலாம். மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நல்லது. 
கம்பு முளைகட்டி சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும். சத்துக்குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட்டால் விரைவில் உடல் உறுதியாகும். இது உடல் சூட்டை குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளை சீராக்கும். இதயம், நரம்புகளுக்கு புத்துணர்வு தரும். இரத்தத்தையும் சுத்திகரிக்கும்.
முளைகட்டிய வெந்தயத்தில் விட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, இருக்கின்றன. வெந்தயத்தில் மூலக்கூறுகளால் உடல்லி இன்சுலின் சுரப்பு அதிகமாககும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க முறைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வரலாம்.
கொள்ளுப்பயறு முளைகட்டி சாப்பிட்டால் விட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் கிடைக்கும். கொழுப்பு, தொப்பை, உடல்பருமன் போன்றவறைறை சரி செய்கிறது.

sprouted-grains

கம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலி உள்ளவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயிரை சாப்பிடலாம்.
முளைக்கட்டிய உளுந்து சாப்பிட்டால் மூட்டுவலி காணாமல் போகும். சர்க்கரை நோயாளிகள் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
முளைக்கட்டிய பச்சைப் பயிறு புரதம், கால்சியம் சத்து தருகிறது. அல்சரை குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி தரும். குழந்தைகளுக்கு ஊட்டம் தரும்.