சமூக விலகல் எங்கே?.. மானியம் வாங்க ரேஷன் கடைகளில் குவியும் மக்கள்!

 

சமூக விலகல் எங்கே?.. மானியம் வாங்க ரேஷன் கடைகளில் குவியும் மக்கள்!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏழை. எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக,  அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.2,000 மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால், ரேஷன் கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில் ரேஷன் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை என்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. டோக்கன் வழங்கப்பட்டு கூட்டம் கூடாமல் பொருட்கள், மானியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருப்பினும், சென்னை சைதாப்பேட்டை ரேசன் கடைகளில் மானியம் வாங்க குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.