சமூக விலகல் இதுதானா? வீடியோ காலில் பேசி மகிழும் மாஸ்டர் டீம்!!

 

சமூக விலகல் இதுதானா? வீடியோ காலில் பேசி மகிழும் மாஸ்டர் டீம்!!

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பொது இடங்களில் சமூக விலகளை கடைபிடிக்குமாறும், மக்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் மாஸ்டர் படக்குழு சமூக விலகலை கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ள மாஸ்டர் பட நாயகி மாளவிகா,  “பிரச்னை வரும் போகும்… கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க… எப்போது உண்மையில் வெளியில் போகமுடியவில்லையோ.. அப்போது நாங்கள் இப்படி?. சமூக இடைவெளியில் மாஸ்டர் குழு… நீங்கள்? என குறிப்பிட்டுள்ளார்.