சமூக வலைதளங்களில் இருந்து விலகல்…பெண்கள் தினம் – சஸ்பென்ஸ் உடைத்த பிரதமர் மோடி!

 

சமூக வலைதளங்களில் இருந்து விலகல்…பெண்கள் தினம் – சஸ்பென்ஸ் உடைத்த பிரதமர் மோடி!

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்ததன் பின்னணியை பிரதமர் மோடியே ட்விட்டர் பதிவில் விளக்கியுள்ளார்.

டெல்லி: சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்ததன் பின்னணியை பிரதமர் மோடியே ட்விட்டர் பதிவில் விளக்கியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் சுமார் 53.3 மில்லியன் பேரும், பேஸ்புக்கில் சுமார் 44 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியன் பேரும், யூடியூப்பில் சுமார் 4.5 மில்லியன் பேரும் பின்தொடர்கிறார்கள். அத்துடன் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். ஆனால், சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுவது பற்றி யோசித்ததாக நேற்று தனது ட்விட்டர் பதிவில் மோடி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பலரும் மோடி இவ்வாறு செய்யக் கூடாது என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தினர். அதனால் நோ சார் என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இந்த நிலையில், நேற்றைய ட்விட்டர் பதிவுக்கான சஸ்பென்ஸ் பதிலை பிரதமர் மோடி தற்போது இன்னொரு ட்விட்டர் பதிவு மூலம் கூறியுள்ளார். அதாவது “இந்த மகளிர் தினத்தன்று, எனது சமூக வலைத்தள கணக்குளை பெண்கள் நிர்வகிக்கலாம். தனது வாழ்க்கை மற்றும் பணியால் முன்மாதிரியாக திகழும் பெண்களிடம் எனது சமூக வலைத்தளங்களை தர தயார். இது பல லட்சம் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். நீங்கள் அத்தகைய பெண்ணா, அல்லது இதுபோன்ற பெண்களை உங்களுக்குத் தெரியுமா?  #SheInspireUs என்ற ஹேஷ்டேக்கில் இது தொடர்பான தகவல்களை ஷேர் செய்யுங்கள்” என்று மோடி கூறியுள்ளார்.