சமூக பிரச்னைக்காக குரல் கொடுக்கும் விஜய் ரசிகர்கள்! தளபதி சொன்ன வார்த்தைகளை நிஜமாக்கி ட்ரெண்ட்!! 

 

சமூக பிரச்னைக்காக குரல் கொடுக்கும் விஜய் ரசிகர்கள்! தளபதி சொன்ன வார்த்தைகளை நிஜமாக்கி ட்ரெண்ட்!! 

சமூக பிரச்னைக்காக குரல் கொடுத்து விஜய் ரசிகர்கள் #MasterHelmetAwareness என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். 

சமூக பிரச்னைக்காக குரல் கொடுத்து விஜய் ரசிகர்கள் #MasterHelmetAwareness என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். 

அவ்வப்போது சமூக வலைதளமான ட்விட்டரில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மாறி மாறி அடித்துக்கொள்வதும், ஹேஷ்டேக் உருவாக்கி திட்டிக்கொள்வதும் தொடர்கதையாகிவருகிறது. ஒரு கட்டத்தில் முகம் சுளிக்கவைக்கும் அளவிற்கு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதில் தேவையில்லாத மீம்ஸ்களை பதிவிட்டு தரம் தாழ்ந்து விமர்சனங்களை செய்வர்.

#MasterHelmetAwareness

இந்த சூழலில் பிகில் திரைப்பட இசைவெளியீட்டின் போது நடிகர் விஜய், ரசிகர்கள் சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய வேண்டும், தேவையில்லாதவற்றிகாக விவாதம் செய்யக்கூடாது. சமூக வலைதளத்தை நல்லவற்றிற்கு பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தியிறுந்தார். 

#MasterHelmetAwareness

விஜயின் சொற்படி, அவரது ரசிகர்கள்  தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் விதமாக #MasterHelmetAwareness என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.  தலை கவசம் அணிவது எவ்வளவு முக்கியமானது என்பது குறித்த விழிப்புணர்வு மீம்ஸ்களை இந்த ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் #MasterHelmetAwareness என்ற ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங் உள்ளது. இது வரப்போகும் விஜய் படமான மாஸ்டர் படத்திற்கான ஃபீரி புரோமஷனாகவும் பார்க்கப்படுகிறது.