‘சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையை மோடி அரசு கைவிட வேண்டும்’ இடஒதுக்கீடு மறுப்பு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி

‘சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையை மோடி அரசு கைவிட வேண்டும்’ இடஒதுக்கீடு மறுப்பு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி

மருத்துவக் கல்விக்கான மேல் படிப்புக்கு இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. இதில் மத்திய அரசு தொடர்பாக முன்வைக்கப்பட்ட வாதம் பற்றி கடும் விமர்சனத்தை அரசியல் தலைவர்கள் முன் வைத்து வருகின்றனர். பாமக தலைவர் ராமதாஸ் மிக நீண்ட அறிக்கையை நேற்று வெளியிட்டார். இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி மத்திய அரசின் போக்கை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான அகில இந்திய ஒதுக்கீடான 27%ஐ ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று இறுதி வாதங்கள் நடைபெற்றன. அப்போது மோடி அரசின் சார்பிலும், இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பிலும் வாதிட்ட வழக்கறிஞர்கள், “மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க அவசியமில்லை” என்று வாதிட்டனர்.

‘சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையை மோடி அரசு கைவிட வேண்டும்’ இடஒதுக்கீடு மறுப்பு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி

இந்த வாதம் அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவதற்காகவே “மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம்-2006” என்பதாக அரசமைப்பு சட்டத்தில் 93ஆவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாகும்.

இச்சட்டத் திருத்தத்தின்படி ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த முடியாது என்று கூறும் உரிமை இந்திய மருத்துவ கவுன்சிலுக்குக் கிடையாது. மருத்துவக் கவுன்சிலின் முதுகுக்குப் பின்னால் ஒழிந்துகொள்வது நாடாளுமன்றத்திற்கும் மோடி அரசுக்கும் அழகல்ல.

‘சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையை மோடி அரசு கைவிட வேண்டும்’ இடஒதுக்கீடு மறுப்பு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி

பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து அசோகா குமார் தாக்கூர் என்பவர் தொடுத்த வழக்கில், “இந்த 27% இடஒதுக்கீடு செல்லும்” என்றே தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

எனவே மோடி அரசும் மருத்துவக் கவுன்சிலும் இடஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பது ஏமாற்று வேலை மட்டுமல்ல ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.
எனவே சமுகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கையை மோடி அரசு கைவிட்டாக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்கள் மற்றும் அகில இந்திய இதர பிறபடுத்த வகுப்பு மக்களின் கருத்தாகும்.

‘சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையை மோடி அரசு கைவிட வேண்டும்’ இடஒதுக்கீடு மறுப்பு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி

தமிழர்கள் மருத்துவம் படிக்காதபடி செய்ய முதலில் “நீட்”டைக் கொண்டுவந்த மோடி, இப்போது சட்டவிரோதமாக, மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் அகில இந்திய ஒதுக்கீடான 27%யும் மறுக்கிறார்!

அரசமைப்புச் சட்டத்தை மீறும் மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கவும் எச்சரிக்கவும் செய்வதோடு, அரசின் முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ என்று குறிப்பிட்டுள்ளது.