சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள் மூடப்படும்- ஆர்.பி. உதயகுமார்

சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள் மூடப்படும்- ஆர்.பி. உதயகுமார்

சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், 144 தடையுத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜெகன் நாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், “நம்மை நாமே கட்டுப்படுத்தி கொள்வதன் மூலமாக தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை முதல்வர் உறுதி செய்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருக்கின்றது. 37 மாவட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தோடு, மாநில கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. 3,250 கோடி அளவிற்கு முதல்வர் அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு வழங்கி உள்ளார். கொரோனா அச்சுறுத்தலை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 144 தடைக்கு மக்கள் முழு ஆதரவை அளித்து வருகின்றனர். 14 ஆயிரத்து மேற்பட்ட இடங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

rb udhayakumar

எந்த சட்டம் வழிவகை ஏற்படுத்தி கொடுத்தாலும், இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக மாநில மக்கள் தங்கள் ஆதரவை அரசின் நடவடிக்கைக்கு அளித்து வருகிறார்கள்.  எல்லா நிலைகளிலும் சமூக பரவலை தடுக்கும் வகையில், நாம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களை இடைவெளிவிட்டு நிற்கவைத்து கடைகளில் பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும். நோய் பரவாமல் தடுக்க 1.5மீட்டர் இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்படி கடைபிடிக்காத கடைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 400 கடைகள் மூடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.