சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்ட குடிமகன்கள்.. மதுக்கடைகளை மூட மும்பை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

 

சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்ட குடிமகன்கள்.. மதுக்கடைகளை மூட மும்பை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

மதுக்கடைகளை திறந்தவுடன் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு, மதுபாட்டில்களை வாங்கிக் குடிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை கிட்டத்தட்ட 40 நாட்களாக வீட்டிலேயே முடங்க வைத்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கும் ஒருமித்த குரலான ‘மது ஒழிப்பு’ கொரோனாவால் நடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக 40 நாட்களாக மது இல்லாமல் இருக்கும் குடிமகன்களை மதுவில் இருந்து மீட்டுக் கொண்டு வர இதுவே நல்ல சூழல் என்று பல கருத்துக்கள் எழுந்தன.

ttn

ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் மொத்த செலவையும் அரசே ஏற்பதால், மதுக்கடைகளை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் மது விலையை 50 முதல் 70%  வரை உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு தான் விலையை உயர்த்தினாலும் குடித்தே ஆக வேண்டிய காட்டாயத்தில் இருக்கும் குடிமகன்கள் மதுக்கடைகளை திறந்தவுடன் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு, மதுபாட்டில்களை வாங்கிக் குடிக்கின்றனர்.

ttn

இந்நிலையில் மும்பையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மும்பை மாநகராட்சி அதிரடி  பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா தலைமையாக கொண்ட மும்பையில் அதிகமாக கொரோனா பரவி இருப்பதாலும், சமூக விலகலை கடைபிடிக்காமல் மது வாங்கிச் செல்வதாலும் அத்தியாவசியமற்ற மதுக்கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. இது குடிமகன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.