சமி, ஜடேஜா அசத்தல்.. இந்திய அணி அபார வெற்றி!!

 

சமி, ஜடேஜா அசத்தல்.. இந்திய அணி அபார வெற்றி!!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரோஹித் 176 ரன்களும், அகர்வால் 215 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்கா அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளித்து 431 ரன்கள் அடித்தது. எல்கர் மற்றும் டி காக் சதம் அடித்தனர். இந்தியாவிற்கு அஸ்வின் 7 விக்கெட்டுகள் எடுத்தார்.

shami

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் புஜாரா இருவரும் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 323 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்த இந்திய அணி , 395 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

இமாலய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு இம்முறை துவக்க வீரர்கள் பெரிதும் கை கொடுக்கவில்லை. முதல் 5 வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். நடுவரிசையில் முத்துசாமி மற்றும் பியட் இருவரும் சற்று நிலைத்து ஆடினாலும், அதுவும் இறுதிவரை நீடிக்கவில்லை. இறுதியாக, இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

shami

துவக்க வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.