சமஸ்கிருதத்தில் பிரார்த்தனை செய்த அமெரிக்க பாடகி !

சமஸ்கிருதத்தில் பிரார்த்தனை செய்த அமெரிக்க பாடகி !

பாப் பாடல்களில் புகழ்பெற்ற பெண் பாடகராக இருக்கும் அமெரிக்க பாடகி லேடி காகா தனது டிவிட்டரில் சமஸ்கிருதத்தில் பிரார்த்தனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பாப் பாடல்களில் புகழ்பெற்ற பெண் பாடகராக இருக்கும் அமெரிக்க பாடகி லேடி காகா தனது டிவிட்டரில் சமஸ்கிருதத்தில் பிரார்த்தனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ladykaka

லேடி காகா தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட பதிவில், உலகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் திகழட்டும் என்ற பொருள் படும் லோகா சமஸ்தாஸ் சுகினோ பவந்து என்ற சமஸ்கிருத பிரார்த்தனையை வெளிப்படுத்தி உள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள்கள் அந்த பிரார்த்தனை மூல மந்திரமான ஓம் சாந்தி ஓம் சாந்தி எனற பதில் டிவிட் போட்டு வருகின்றனர்.

இத்தாலிய அமெரிக்கரான லேடி காகா, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென தவறி ரசிகர்கள் பக்கத்தில் விழுந்தார்பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் லேடி காகாவை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மேடை ஏறி பேசிய லேடி காகா, பிரச்னை ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாக உள்ளது என கூறி, நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். இதனை ரசிகர்கள் பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதேபோல் 2013 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியிலும் லேடி காகா மேடையில் தவறி விழுந்து அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.