‘சமரசம் இல்லாத ஒரு படைப்பாளி’ – மறைந்த பிரபஞ்சனுக்கு வைரமுத்து இரங்கல்

 

‘சமரசம் இல்லாத ஒரு படைப்பாளி’ – மறைந்த பிரபஞ்சனுக்கு வைரமுத்து இரங்கல்

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு சமரசம் இல்லாத கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு சமரசம் இல்லாத கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராக அறியப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். பத்திரிகைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கிய பிரபஞ்சன் காலப்போக்கில் இலக்கிய உலகில் ஆளுமை மிக்க எழுத்தாளரானார். இவர் ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். 

prabanchan

இவர் தனது ”வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக கடந்த 1995-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான கதைகளை அவர் எழுதியுள்ளார்.சமீபகாலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி அவர் இன்று புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 73. 

இந்நிலையில், முறைப்படி தமிழ் படித்த புலவர் பிரபஞ்சன் என்றும் அவர் ஓர் சமரசம் இல்லாத படைப்பாளி என்றும் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும், பிரபஞ்சனின் நாவல்களில் பெண்ணியம் சற்று தூக்கலாக இருக்கும் என்றும் வைரமுத்து தன் இரங்கற்பாவில் குறிப்பிட்டுள்ளார்.