சமந்தா, ரம்யா கிருஷ்ணனை பாலோ பண்ணும் தமன்னா

 

சமந்தா, ரம்யா கிருஷ்ணனை பாலோ பண்ணும் தமன்னா

இவர் விஷாலுடன் இணைந்து  நடித்திருந்த  ஆக்ஷன் திரைப்படம்  சமீபத்தில் வெளியானது. 

நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர்  நடிகை தமன்னா. இவர் விஷாலுடன் இணைந்து  நடித்திருந்த  ஆக்ஷன் திரைப்படம்  சமீபத்தில் வெளியானது. 

tamanana

இந்நிலையில் நடிகை தமன்னா  வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் ராம் சுப்ரமணியன் இயக்கும் இக்கதையை விகடன் ஒளித்திரை தயாரிக்கிறது. இது அப்பா மகளின் உறவை பேசும் விதமாக  இந்த வெப் சீரிஸ்  அமையவுள்ளது. ஹாட் ஸ்டார் தளத்தில் தமிழில் உருவாகும் ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார் தமன்னா.

tamanna

ஏற்கனவே சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹா, ஹன்சிகா ஆகியோர் வெப் சீரிஸில் நடித்து  வரும் நிலையில் நடிகை தமன்னாவும் அந்த  வரிசையில் இணைந்துள்ளார்.