சமந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு, நான் ஹாட்டா? சமந்தா ஹாட்டா? என கேள்விக்கேட்ட ஸ்ரீரெட்டி!

 

சமந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு, நான் ஹாட்டா? சமந்தா ஹாட்டா? என கேள்விக்கேட்ட ஸ்ரீரெட்டி!

திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைக்கின்றனர் என தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தி சர்ச்சையைக் கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றம்சாட்டி தமிழ் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

sri reddy post
தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி அவருடைய பேஸ்புக் பக்கத்தில், நடிகை சமந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு, இவர் வேண்டுமானால் பெரிய நடிப்பில் நட்சத்திரமாக இருக்கலாம் ஆனா, சமந்தா ஹாட்டா அல்லது நான் ஹாட்டா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர், நீங்கள்தான் ஹாட் என ஸ்ரீரெட்டி ஆதரவாக பதிலளித்துள்ளனர்.