சமண மக்களுக்கு முதல்வர் பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

 

சமண மக்களுக்கு முதல்வர் பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சமண சமய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சமண சமய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாவீரர் ஜெயந்தி சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.

ttn

நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சமண சமய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது வாழ்த்து செய்தியில் கூறுகையில், “பகவான் மகாவீரரின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ttn

அகிம்சையை அடிப்படையாக கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றை மக்களுக்கு போதித்தார். மேலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையே அறம் என்றுரைத்து வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து அறநெறியை பின்பற்றி வாழ்ந்தார்” என்றார்.