‘சபாலங்கி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி’ கமல்ஹாசன் அன்னைக்கே இந்த ஹோட்டலைப்பற்றித்தான் பாடியிருக்கிறார் !

 

‘சபாலங்கி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி’ கமல்ஹாசன் அன்னைக்கே இந்த ஹோட்டலைப்பற்றித்தான் பாடியிருக்கிறார் !

கறிக்குழம்பு செய்வது போல,பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் தக்காளி,இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடிப்படை கிரேவி தயாரித்துக் கொள்கிறார்கள்

‘சபாலங்கி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி’ என்று கமலஹாசனால் சிறப்பித்து பாடப்பட்ட ‘ வடகறி ‘ பிறந்த இடம் இந்த மாரி ஹோட்டல்தான். சைதை,வி.எஸ் முதலி தெருவில் நுழைந்ததுமே உங்களை வரவேற்பது,மாரி ஹோட்டல் வடகறி வாசனைதான்!

இதே இடத்தில் 50 ஆண்டுகளாக இருக்கும் மாரி ஹோட்டலை துவக்கிய மாரிமுத்துதான் இன்று தமிழகம் முழுவதும் பரவி விட்ட வடகறியை உருவாக்கியவர்.

மாரி

பொதுவாக சென்னை மாதிரியான நகரங்களில் வடகறி குறித்து ஒரு தவறான வதந்தி உண்டு.முதல் நாள் மீதமாகிப்போன மசால் வடையைத்தான் இந்த வடிவில் அடுத்த நாள் மாற்றி வடகறி என்ற பெயரில் கொடுக்கிறார்கள் என்பதுதான் அந்த வதந்தி,இது தனியாக செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் அயிட்டம் என்பது இந்த ஹோட்டலுக்குப் போனால் கண்கூடாக பார்க்கலாம்.

கறிக்குழம்பு செய்வது போல,பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் தக்காளி,இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடிப்படை கிரேவி தயாரித்துக் கொள்கிறார்கள்.அதில் தயாராக பொரித்து வைத்திருக்கும் பக்கோடாவை போட்டு ,ஒரு கொதிவந்ததும்   அடுப்பை அனைத்து விட்டால் சூடான வடகறி ரெடி!

மாரி ஹோட்டல்

 

இதை,இட்லி,தோசை,அதிலும் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும் ‘செட் தோசை’ பூரி,புரோட்டா,சப்பாத்தி,ஏன் பொங்கலுக்குகூட சைடிஷ்சாக வைத்துக்கொண்டு வெளுத்துக் காட்டுகிறார்கள் சென்னை வாசிகள்.

வடகறிக்கு வடிவம் கொடுத்த மாரிமுத்து இறக்கும்வரை கடைக்கு போர்டு கூடக் கிடையாது.மாரி ஓட்டல் என்று பெயர் மக்கள் வைத்தது,அதை மாரிமுத்துவின் மக்கள் விரிவாக்கம் செய்து இன்றைய நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.

வடகறி

காலை 6.30 க்கே சூடான இட்லியும் பூரியும் வடைகறியுடன் பரிமாறுகிறார்கள். எட்டு மணிக்கெல்லாம் பார்சல் வாங்கும் கூட்டம் அலை மோதுகிறது.எட்டுப்பேர் பார்சல் காட்டுகிறார்கள். அதில்,வடைகறி பார்சல் கட்ட மட்டும் மூன்று பேர்.

வடைகறி செய்ய மட்டும் தனியாக ஒரு மாஸ்டர்.அவர் ஒரு நாளில் குறைந்தது ஐந்து முறையாவது வடகறி செய்யவேண்டி இருக்கிறது.இது சாதாரண நாட்களில்,விடுமுறை தினங்களில் ருசிகண்ட பூனைகள் நிறைய வந்து க்யூ கட்டுகிறார்கள்.அதில் பிரபலங்களின் பினாமி டிஃபன் பாக்ஸ்களும் உண்டு.ஒருமுறை நீங்களும் டேஸ்ட் பண்ணிப் பாருங்கள்.