சபாநாயகரும், அவரது குடும்பமும் விளங்காமல் போகும்: தங்க தமிழ்ச்செல்வன் சாபம்

 

சபாநாயகரும், அவரது குடும்பமும் விளங்காமல் போகும்: தங்க தமிழ்ச்செல்வன் சாபம்

எங்களை பதவி நீக்கம் செய்த சபாநாயகர் மற்றும் அவரது குடும்பமும் விளங்காமல் போகும் என அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் சாபம் விடுத்துள்ளார்

சென்னை: எங்களை பதவி நீக்கம் செய்த சபாநாயகர் மற்றும் அவரது குடும்பமும் விளங்காமல் போகும் என அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் சாபம் விடுத்துள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகரின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் பதவி இழந்துள்ளனர். 

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்திருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மக்களின் கருத்துக்ளை கேட்ட பின்னர் பெரும்பாலான தகுதி நீக்க எம்எல்ஏ-க்கள் எடுத்துள்ள முடிவின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன், தவறு செய்யாத எங்களை பதவி நீக்கம் செய்த சபாநாயகர் மற்றும் அவரது குடும்பமும் விளங்காமல் போகும் என சாபம் விடுத்துள்ளார்.