சபாநாயகருடன் முதல்வர் திடீர் சந்திப்பு

 

சபாநாயகருடன் முதல்வர் திடீர் சந்திப்பு

முதல்வர் பழனிசாமி சபாநாயகர் தனபாலை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

சென்னை: முதல்வர் பழனிசாமி சபாநாயகர் தனபாலை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்யநாரயணன் தீர்ப்பளித்தார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனவும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் எனவும் தினகரன் தரப்பினர் கூறியுள்ளனர். இதற்கிடையே எம்.எல்.ஏக்கள் 18 பேரும் எம்.எல்.ஏ விடுதி அறையை காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். மேலும், தினகரனுக்கு ஆதரவாக செயல்படும். ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களிடமும் விளக்கம் கேட்டும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி சபாநாயகர் தனபாலை சென்னை தலைமை செயலகத்தில் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது 3 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.