சபாநாயகருடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அவசர ஆலோசனை.. கருணாஸின் எம்.எல்.ஏ பதவிக்கு வேட்டா?

 

சபாநாயகருடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அவசர ஆலோசனை.. கருணாஸின் எம்.எல்.ஏ பதவிக்கு வேட்டா?

கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகருடன் சட்டத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

சென்னை: கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகருடன் சட்டத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

முதலமைச்சர் குறித்தும் தமிழக அரசு குறித்தும் மிக கீழ்த்தரமாக பேசியதாக கருணாஸ் எம்.எல்.ஏ மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதனையடுத்து, வெளியே வந்த கருணாஸ், அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதுமட்டுமின்றி கூவத்தூர் குறித்தும் மிரட்டல் விடுக்கும் தொனியில் கருணாஸ் பேசி வருகிறார்.

இந்நிலையில், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகருடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், எம்.எல்.ஏ பதவி பறிபோக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முன்ஜாமீன் கோரி கருணாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.