சபாநாயகருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

 

சபாநாயகருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

சபாநாயகர் தனபாலை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.

சென்னை: சபாநாயகர் தனபாலை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும் என்பதால் கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்தது. மத்திய அரசி இந்த நடவடிக்கை தமிழகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் வசந்த குமார், விஜயதாரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் தனபாலை சந்தித்தனர்.  அப்போது கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

மேலும், மேகதாது அணை பிரச்னையில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்தவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.