சபாநாயகரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மத்திய அமைச்சர்.

சபாநாயகரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மத்திய அமைச்சர்.

பாவம் மத்திய இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ,நேற்று அவருக்கு மிகவும் மோசமான நாளாக இருந்திருக்க வேண்டும்.ஹைதராபாத் போலீசார் நான்கு பேரை என்கவுண்டர் செய்த மேட்டரை நேற்று நாடே விவாதித்துக் கொண்டு இருந்த போது அதில் அவினாஷ் பாண்டேவும் கலந்து கொண்டார்.இந்த அவினாஷ் பாண்டே மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோவின் டிவிட்டர் அக்கவுண்டை ஹேண்டில் செயபவர்.

babul supriyo

உற்சாகமான அவினாஷ் பாண்டே ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி அமைச்சரின் டிவிட்டர் அக்கவுண்ட்டில் ‘ மனித உரிமை என்பது மனிதர்களுக்கு மட்டும்தான்.மனித மாமிசம் புசிப்பவர்களுக்கு அல்ல’ என்று.இதே சமயத்தில் பார்லிமெண்ட்டில் சுற்றுச்சூழல் துறை குறித்த விவாதம் நடந்துகொண்டு இருந்தது.இணைஅமைச்சர் பபுல் சுப்ரியா தனது இருக்கையில் இருந்து எழுந்து போய் தன் துறை அமைச்சரான பிரகாஷ் ஜாவடேக்கரிடம் எதையோ விவாதித்துக்கொண்டு இருந்தார்.

அந்த நேரம் பார்த்து உறுப்பினர் ஒருவரின் துறை சார்ந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற சபாநாயக் ஓம் பிர்லா அறிவித்தார். இதைக் கவனிக்காமல் அமைச்சர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருப்பதை சபாநாயகர் கவனித்து விட்டார்.அவளவுதான்,சபாநாயகருக்கு கோபம் வந்துவிட்டது.அவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் துறைசார் அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருப்பதை வெளிப்படையாக கண்டித்தார் . 

om birla

ஓம் பிர்லாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு வெளியே வந்தால் பபுல் சுப்ரியாவின் டிவிட்டர் அக்கவுண் அட்மின் அவினாஷின் ட்வீட் சர்ச்சைக்கு பதில் சொல்ல வேண்டியதாகிவிட்டது . கடுப்பான பபுல் சுப்ரியா அவினாஷ் பாண்டேவை உடனே பொறுப்பில் இருந்து தூக்கிவிட்டு ‘ என் அக்கவுண்ட்டை நானே பார்த்திருக்க வேண்டும்,வேறு ஒருவரை அனுமதித்தது தவறுதான் ‘ என்று சொல்லி இருக்கிறார். பாவம் பிஜேபி தலைவர்களுக்கு முதல் எதிரியே அவர்களது அட்மின்களாகத்தான் இருக்கிறார்கள் எல்லா ஸ்டேட்டிலும்!.