சபரி மலையில் நாளை மறுநாள் மண்டல விளக்குப் பூஜை… 40 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்!

 

சபரி மலையில் நாளை மறுநாள் மண்டல விளக்குப் பூஜை… 40 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்!

பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் சுமார் 40 கி.மீ தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மகர பூஜை மற்றும் மண்டல விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்படும்.கார்த்திகை பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இந்த மாதம் 27-ந் தேதியும், மகர விளக்குப் பூஜை ஜனவரி 15-ந் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.

yyn

நடை திறந்த நாளிலிருந்தே  தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கார்த்திகை மாத சிகர நிகழ்ச்சியான மண்டல விளக்குப் பூஜை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதனால், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் சுமார் 40 கி.மீ தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

ttn

இதனிடையே நாளை காலை 8 மணி முதல் 11 மணி சூரிய கிரகணம் என்பதால், 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் 26 மற்றும் 27 ஆம் தேதி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ttn

பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நிலக்கல் மற்றும் பம்பை  ஆகிய இடங்களிலேயே தடுத்து நிறுத்தி அங்கிருந்து சிறு சிறு குழுக்களாகச் சன்னிதானம் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த இரண்டு தினங்களுக்குக் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, பக்தர்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளன.