சபரிமலை விவகாரம்: ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

 

சபரிமலை விவகாரம்: ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கேரளா: உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பிற்குப் பின் பெண்களும்  கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பெண்களை உள்ளே அனுமதிக்கத் தடை விதிக்கக் கோரி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

rehana

முன்னதாக கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான ரெஹனா பாத்திமா என்ற பெண் இருமுடியுடன் கோயிலுக்குள் செல்ல முயன்றார்.  இதனால் சபரிமலையில் கலவரம் வலுத்த நிலையில், அவர்  பாதுகாப்பாக திருப்பியனுப்பப்பட்டனர். 

இதையடுத்து ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், தான் கைது செய்யப்படலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.