சபரிமலை விவகாரம்… பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

சபரிமலை விவகாரம்… பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை சென்று வந்த 2 பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லி: சபரிமலை சென்று வந்த 2 பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் போராட்டக்காரர்களையும் மீறி கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வந்தனர்.

இந்நிலையில்,கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இரு பெண்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரண்டு பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.