சபரிமலை விவகாரம்: பெண்கள் ஆண்களின் கழிப்பறையில் உட்காருவது போன்றது: சாரு ஹாசன் சர்ச்சை கருத்து !

 

சபரிமலை விவகாரம்: பெண்கள் ஆண்களின்  கழிப்பறையில் உட்காருவது போன்றது: சாரு ஹாசன் சர்ச்சை கருத்து !

சபரிமலை விவகாரம் தொடர்பாக நடிகர் கமல் ஹாசன் அண்ணனும், நடிகருமான சாரு ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சென்னை: சபரிமலை விவகாரம் தொடர்பாக நடிகர் கமல் ஹாசன் அண்ணனும், நடிகருமான சாரு ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனையடுத்து, நேற்று முன்தினம் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பெண்களை உள்ளே அனுமதிக்கத் தடை விதிக்கக் கோரி பாஜக, ஆர்.எஸ்.எஸ்,  ஆண் பக்தர்கள் என பலவேறு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தியளவில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

இந்த விவகாரம் தொடர்பாக கமலின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் சர்ச்சைக்குரிய கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஒரு தவறான சமத்துவம், சபரிமலைக்குச் செல்வதில் கேட்கப்படும் சமத்துவம். பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை? அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம்’ என்று பதிவிட்டுள்ளார். சாருஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.