சபரிமலை விவகாரம்… பக்தர்கள் விருப்பத்தை ஏற்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

 

சபரிமலை விவகாரம்… பக்தர்கள் விருப்பத்தை ஏற்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சபரிமலை விருப்பத்தில் பக்தர்களின் விருப்பத்தை ஏற்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்

பெரம்பலூர்: சபரிமலை விருப்பத்தில் பக்தர்களின் விருப்பத்தை ஏற்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று திறக்கப்படும் சூழலில், சபரிமலைக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் விருப்பத்தை ஏற்க வேண்டும். கேரள பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது நம்பிக்கை தொடர்பானது. பக்தர்களின் நம்பிக்கையை அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. சபரிமலை கோயிலுக்கென்று இருக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.