சபரிமலை விவகாரம்: கிறிஸ்தவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பு கூற முடியுமா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

 

சபரிமலை விவகாரம்: கிறிஸ்தவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பு கூற முடியுமா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீதித்துறை கிறிஸ்தவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியுமா?  பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீதித்துறையினால்  கிறிஸ்தவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என தீர்ப்பளிக்க முடியுமா? என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
     
சபரிமலை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கருத்து  கூறி வரும் நிலையில் இது பற்றி  பேசியுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘சபரிமலையில் நடக்கும் பாரம்பரிய விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. இது, எனது தனிப்பட்ட கருத்து. மாதவிடாய் காலங்களிலுள்ள 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் வரக்கூடாது என்ற ஐதீகம் உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், ‘நீதிமன்றம் எங்குத் தலையிடலாம் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லப்படும்போது, அங்குத் தலையிடலாம். கிறிஸ்தவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியுமா? முடியாது தானே. மதத்தில் விஞ்ஞானத்தைப் புகுத்தக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.