சபரிமலை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல்

 

சபரிமலை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல்

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதற்கு ஒருசேர ஆதரவும் எதிர்ப்பும் கிளப்பி இருக்கிறது. மேலும் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் தெரிவித்திருந்தன. இதனையடுத்து நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது,

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில்ல் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் 3 நாட்களுக்குள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பந்தளம் அரண்மனை சார்பிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.