சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும்: பந்தளம் அரண்மனை அறிவிப்பு

 

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும்: பந்தளம் அரண்மனை அறிவிப்பு

ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக பந்தளம் அரண்மனை சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக பந்தளம் அரண்மனை சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதற்கு ஒருசேர ஆதரவும் எதிர்ப்பும் கிளப்பி இருக்கிறது. மேலும் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் தெரிவித்திருந்தன. இதனையடுத்து நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது,

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என பந்தளம் அரண்மனை அறிவித்துள்ளது. முன்னதாக இதுகுறித்து ஆலோசனை செய்ய பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் பூசாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவரது அழைப்பை பந்தளம் அரண்மனை பிரதிநிதிகளும்,  ஐயப்பன் கோயில் பூசாரிகளும் நிராகரித்துள்ளனர்.