சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

 

சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சரண முழக்கங்களுடன் தரிசித்தனர். 

பத்தினம்திட்டா: சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சரண முழக்கங்களுடன் தரிசித்தனர். 

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் நாள்தோறும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 

sabarimala

அதன் தொடர்ச்சியாக, மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று மாலை நடந்தது. இந்த பூஜைக்காக பக்தர்கள் பெரும் அளவில் குவியக்கூடும் என்பதால், அவர்களின் வசதிக்காக, போக்குவரத்தை சீர்படுத்துவது, காணாமல் போகும் நபர்களை மீட்பது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளில் பெரும் அளவிலான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

mahara

இந்த நிலையில், மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறக்கப்பட்டது. அதன்பின், மகரவிளக்கு பூஜையையொட்டி சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மாலை 6.20 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றை தந்திரி ராஜீவரு மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பெற்று கொண்டு சாமிக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தினர். 

mahara

இதனைத் தொடர்ந்து, சரியாக 6.35 மணி அளவில் பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி கொடுக்கும் மகரஜோதி தரிசன வைபவம் நடைபெற்றது.

mahara

இந்த மகரஜோதியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர்.