சபரிமலை செல்ல முயன்ற சென்னை பெண்கள் தடுத்து நிறுத்தம்: கேரளாவில் பதற்றம்

 

சபரிமலை செல்ல முயன்ற சென்னை பெண்கள் தடுத்து நிறுத்தம்: கேரளாவில் பதற்றம்

சபரிமலைக்கு செல்ல முயன்ற சென்னை பெண்கள் 11 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்ல முயன்ற சென்னை பெண்கள் 11 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் போராடி வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பெண்களை அவர்கள் தடுத்தும் நிறுத்துகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்ல விரும்பும் பெண்களை ஒருங்கிணைத்து ‘மனிதி’ என்ற  அமைப்பு சபரிமலை கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தது, அதன்படி சென்னையை சேர்ந்த 11 பெண்கள் பம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் ஐயப்ப பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

ஆனால் ஐயப்பனை தரிசனம் செய்யாமல் நாங்கள் திரும்ப மாட்டோம் என மனிதி அமைப்பை சேர்ந்த பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். முன்னதாக சபரிமலைக்கு வருவதையொட்டி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு மனிதி அமைப்பினர் கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.