சபரிமலை செல்ல திருப்தி தேசாயிக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது : கொச்சி காவல்துறை ஆணையர் அறிவிப்பு!

 

சபரிமலை செல்ல திருப்தி தேசாயிக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது : கொச்சி காவல்துறை ஆணையர் அறிவிப்பு!

மும்பையிலிருந்து சபரிமலை செல்வதற்காக வந்த பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் கடந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டார். 

சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில். கடந்த ஆண்டு கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து என்ற இரண்டு பெண்கள் சபரிமலையில் பலத்த பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர்.பெண்கள் சபரிமலைக்குள் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், மும்பையிலிருந்து சபரிமலை செல்வதற்காக வந்த பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் கடந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டார். 

trip[thi

இந்த ஆண்டு சபரிமலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது என்று கேரளா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. சபரிமலை செல்வதற்காக இன்று காலை திருப்தி தேசாய் கொச்சி வந்தார். தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி கொச்சி காவல்துறையினர் ஆணையரிடம் கேட்டுள்ளார். அதற்குக் காவல் ஆணையர் கே.பி.பிலிப் மறுப்பு தெரிவித்துள்ளார். 

tripthi

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி, எனக்குப் பாதுகாப்பு வழங்க மறுத்ததால் நிச்சயமாக நான் நீதிமன்றம் செல்வேன். இதற்குக் கேரளா முதல்வரும் கொச்சி காவல் ஆணையரும் பதில் அளித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்தும் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் கே.பி.பிலிப், ” பாதுகாப்பு வழங்க முடியாது என்று திருப்தியிடம் தெளிவாகக் கூறிவிட்டோம். ஆனால், அவர் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றாலும் நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என்று கூறுகிறார். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே பாதுகாப்பு வழங்கப்படாது என்று கூறினோம்” என்று தெரிவித்துள்ளார்.