சபரிமலை செல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்: கேரள முதல்வர் அதிரடி

 

சபரிமலை செல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்: கேரள முதல்வர் அதிரடி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்களுக்கு கேரள அரசு முழு பாதுகாப்பை அளிக்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்களுக்கு கேரள அரசு முழு பாதுகாப்பை அளிக்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் அறிவித்திருந்தாலும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள், பந்தளம் அரண்மை, ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும் என தலைமை தந்திரி மகேஷ்வரரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது இந்த எச்சரிக்கை பெண் பக்தர்களிடையே பதற்றத்தை அதிகரித்தது.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்களுக்கு அரசு முழு பாதுகாப்பை அளிக்கும். அனைத்து வகையிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்படுத்தப்படும். யாரும் சட்டத்தை கையில் எடுப்பதை அரசு அனுமதிக்காது என்றார்.