சபரிமலை சீராய்வு மனு விசாரணை தேதியை அறிவித்தது உச்சநீதிமன்றம்!

 

சபரிமலை சீராய்வு மனு விசாரணை தேதியை அறிவித்தது உச்சநீதிமன்றம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கின் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி முதல் விசாரிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கின் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி முதல் விசாரிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சில மாதங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.’

அந்த தீர்ப்பிற்கு பின் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது, உள்ளே செல்ல பெண்களும் முயற்சி செய்தனர். ஆனால், பக்தர்களை அவர்களை உள்ளே விடாமல் தடுத்ததால் அங்கு பெரும் கலவரமே உருவாகும் சூழல் ஏற்பட்டது. அதன்பின், கோயில் நடை மூடப்பட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த சீராய்வு மனுக்களை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.