சபரிமலை சீசன்.. ஐயப்பன் கோவிலில் கொட்டிய பணமழை : எத்தனை கோடி வசூல் தெரியுமா?!

 

சபரிமலை சீசன்.. ஐயப்பன் கோவிலில் கொட்டிய பணமழை : எத்தனை கோடி வசூல் தெரியுமா?!

நாளுக்கு நாள் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்ததால். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கோவில் வருமானம் அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மகர பூஜை மற்றும் மண்டல விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்படும்.கார்த்திகை பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதியும், மகர விளக்குப் பூஜை ஜனவரி 6-ந் தேதியும் நடைபெற்றது.

ttn

இதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டதிலிருந்து  தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் மாலைபோட்டு விரதம் இருந்து ஐயப்பனைத்  தரிசித்து வந்தனர். பூஜைகளை முன்னிட்டு, ஐயப்பன் கோவிலிலிருந்து சுமார் 40 கி.மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

tttn

நாளுக்கு நாள் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்ததால். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கோவில் வருமானம் அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு நடை  திறந்து 28 நாட்களிலேயே கோவிலின் வருமானம் ரூபாய் 100 கோடியை எட்டியது. ஐயப்பன் கோவிலில் கார்த்திகை பூஜை நேற்றோடு நிறைவடைந்த நிலையில் நேற்று காலை கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜைகளையொட்டி சுமார் 263 கோடியே 46 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த வருவாயை விட  இந்த ஆண்டு ரூ.93 கோடி அதிகமாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.